/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ லாட்டரி விற்ற மாணவர்கள் 3 பேர் சிக்கினர் லாட்டரி விற்ற மாணவர்கள் 3 பேர் சிக்கினர்
லாட்டரி விற்ற மாணவர்கள் 3 பேர் சிக்கினர்
லாட்டரி விற்ற மாணவர்கள் 3 பேர் சிக்கினர்
லாட்டரி விற்ற மாணவர்கள் 3 பேர் சிக்கினர்
ADDED : செப் 14, 2025 03:35 AM
துாத்துக்குடி:லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டத்தில், சிலர் வாட்ஸாப் மூலம் லாட்டரி தொழிலில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஏரல் பகுதியில் திடீரென சோதனை நடத்திய போலீசார், கல்லுாரி மாணவர்களான ஜெயபிரகாஷ், 23, விமல் ரித்திக், 19, பெரியசாமி, 19, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் ஆறு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கேரளாவில் தினமும் லாட்டரி குலுக்கல் நடக்கும். பணம் மற்றும் தேர்வு செய்த எண் விபரத்தை, வாட்ஸாப்பில் தெரிவித்தால் குலுக்கல் முடிந்ததும், முதல் பரிசு விழுந்த எண் விபரத்தை வாட்ஸாப் மூலம் பணம் செலுத்தியவர்களுக்கு தெரிவிக்கின்றனர்.
'கடைசி மூன்று எண்கள் ஒரே மாதிரியாக இருந்தால், பணம் செலுத்தியதற்கு ஏற்ப, பணத்தை ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலியான ஜிபேவில் அனுப்புகின்றனர்' என, போலீசார் கூறினர்.