/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கணவரை திட்டியதால் ஆவேசம் பஸ் டிரைவருடன் பெண் வாதம் கணவரை திட்டியதால் ஆவேசம் பஸ் டிரைவருடன் பெண் வாதம்
கணவரை திட்டியதால் ஆவேசம் பஸ் டிரைவருடன் பெண் வாதம்
கணவரை திட்டியதால் ஆவேசம் பஸ் டிரைவருடன் பெண் வாதம்
கணவரை திட்டியதால் ஆவேசம் பஸ் டிரைவருடன் பெண் வாதம்
ADDED : ஜூலை 11, 2024 10:31 PM

துாத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த அரசு பஸ், அண்ணா பஸ் நிலையத்தின் முன் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் சாலையை கடந்து மறுபக்கம் செல்ல முயன்றார். அவரை பார்த்து அரசு பஸ் டிரைவர், 'அறிவு கெட்ட முட்டாள்' என, கோபத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது.
இதைக் கேட்டதும், அங்கிருந்த அந்த நபரின் மனைவி தன் டூ - வீலரை பஸ்சின் முன் நிறுத்தி, டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், 'எம்.எஸ்.சி., படித்த என் கணவரை பார்த்து, எப்படி அறிவு கெட்ட முட்டாள் என கூறலாம்' என, டிரைவரிடம் அந்த பெண் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார், அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பினர். இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது வீடியோ பரவி வருகிறது.