ADDED : ஜூன் 06, 2024 12:46 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே உள்ள குமாரகிரி பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில், 'பீ டவுன் வாட்டர் பார்க்' என்ற தனியார் பொழுதுபோக்கு பூங்கா செயல்படுகிறது.
இதுகுறித்து, மக்கள் மேம்பாட்டு கழக நிறுவனர் அதிசயகுமார் கூறியதாவது:
தனியார் பொழுது போக்கு பூங்காவில் வணிக நோக்கத்தில் பல ஆழ்துளை குழாய் கிணறு களை அமைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் மற்ற நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது.
நீரில் அதிகமானகுளோரின் கலப்பதால் குழந்தைகளுக்கு தோல் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் ஆகியவை ஏற்படுகிறது.
கலெக்டர் இந்த விவகாரத்தில் தலையீட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.