/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ விதிமீறி வீட்டு குடிநீர் இணைப்பு தர முயற்சி தடுத்த பெண்ணுக்கு அடி; கவுன்சிலர் மீது புகார் விதிமீறி வீட்டு குடிநீர் இணைப்பு தர முயற்சி தடுத்த பெண்ணுக்கு அடி; கவுன்சிலர் மீது புகார்
விதிமீறி வீட்டு குடிநீர் இணைப்பு தர முயற்சி தடுத்த பெண்ணுக்கு அடி; கவுன்சிலர் மீது புகார்
விதிமீறி வீட்டு குடிநீர் இணைப்பு தர முயற்சி தடுத்த பெண்ணுக்கு அடி; கவுன்சிலர் மீது புகார்
விதிமீறி வீட்டு குடிநீர் இணைப்பு தர முயற்சி தடுத்த பெண்ணுக்கு அடி; கவுன்சிலர் மீது புகார்
ADDED : ஜூலை 14, 2024 01:42 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி, லயன்ஸ் டவுன், நான்காவது தெருவை சேர்ந்தவர் ராஜ் மனைவி ஜெர்மனி, 45. சில ஆண்டுகளுக்கு முன் ராஜ் இறந்துவிட்டார். அதே பகுதியில் ராஜிக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் அவரது தங்கை பிரிண்டால் வசிக்கிறார்.
அந்த வீடு தொடர்பாக ஜெர்மனிக்கும், பிரிண்டாலுக்கும் தகராறு உள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பிரிண்டால் வசிக்கும் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முயற்சி நடந்து வருகிறது.
அப்பகுதியை சேர்ந்த, 47வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலர் ரெக்சிலின் ஏற்பாட்டில், பிரிண்டால் வீட்டுக்கு நேற்று முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்க குழி தோண்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மனி, கவுன்சிலர் ரெக்சிலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்த வீட்டுக்கு இதுவரை வரி செலுத்தப்படாத நிலையில், முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மனி, தோண்டப்பட்ட குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கு சென்ற பிரிண்டால் குழியில் இறங்கிய ஜெர்மனியின் தலைமுடியை பிடித்து வெளியே இழுத்தார்.
தி.மு.க., கவுன்சிலர் ரெக்சிலின் முன்னிலையில் இந்த தகராறு நடந்த போதிலும், அவர் தடுக்க முயற்சிக்கவில்லை.
மாறாக, அங்கு நடந்த சம்பவத்தை மொபைல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஜெர்மனியின் மகள் ஷர்லியை, கவுன்சிலர் தகாத வார்த்தையில் திட்டினார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குழியில் இருந்து வெளியே வராமல் வெகு நேரமாக ஜெர்மனி இருந்ததால், அவர் மீது பிரிண்டால் தண்ணீரை ஊற்றினார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்த ஜெர்மனி சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஜெர்மனியின் மகள் ஷர்லி கூறியதாவது:
தி.மு.க., கவுன்சிலர் ரெக்சிலின் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பணத்தை பெற்றுக் கொண்டு எந்தவித ஆவணமும் இல்லாமல், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் வீட்டிற்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளார். அவரது துாண்டுதலின்படி, பிரிண்டால் உள்ளிட்ட சிலர் என் தாயை தாக்கினர்.
கவுன்சிலர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., கவுன்சிலரின் அராஜகத்திற்கு மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெர்மனி தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.