/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ சாலையோரம் நிற்கும் லாரிகளால் விபத்து மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் பலி சாலையோரம் நிற்கும் லாரிகளால் விபத்து மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் பலி
சாலையோரம் நிற்கும் லாரிகளால் விபத்து மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் பலி
சாலையோரம் நிற்கும் லாரிகளால் விபத்து மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் பலி
சாலையோரம் நிற்கும் லாரிகளால் விபத்து மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் பலி
ADDED : ஜூன் 07, 2024 08:21 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் லாரிகள் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக, தனியே டெர்மினல் வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், துறைமுகத்தில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துார் விலக்கு வரை சாலையோரத்தில் ஆங்காங்கே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
காவல் துறை எச்சரிக்கையையும் மீறி சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகளால் தொடர்ந்து விபத்து நிகழ்கிறது. இந்நிலையில், மடத்துார் விலக்கு அருகே நேற்று காலை, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பின்னால் துறைமுகத்திற்கு பலகைகள் ஏற்றி சென்ற லாரி பயங்கரமாக மோதியது. ஈச்சர் லாரியில் இருந்த கிளீனர் அல்லிகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்த், 24, சிம்பு, 19, ஆகியோர் படுகாயமடைந்தனர். டிரைவர் தப்பியோடிவிட்டார்.
சிப்காட் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் ஆனந்த் உயிரிழந்தார். சிம்பு சிகிச்சை பெறுகிறார்.
விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:
ஈச்சர் லாரி டிரைவர் துாக்க கலக்கத்தில் ஓட்டியதால் விபத்து நடைபெற்றுள்ளது. துாத்துக்குடி துறைமுகம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ்கள், லாரிகள் உட்பட கனரக வாகனங்கள் மற்றும் டூ வீலர்கள் அனைத்தும் சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.
விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், சார்வீஸ் சாலைகளில் வாகனங்களை நிறுத்தாமல் பைபாஸ் மெயின் ரோட்டின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. அதை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.