/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி., சாடல் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி., சாடல்
தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி., சாடல்
தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி., சாடல்
தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி., சாடல்
ADDED : ஜூன் 13, 2024 07:55 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி.,நேற்று, துாத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்றபடி நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
துாத்துக்குடி மாவட்ட நீட் தேர்வு மையங்களில் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கிய குளறுபடி குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வழி வகை செய்யப்படும்.
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி இனிமேல் தான் தொடங்கும். மறுபடியும் பரிசீலனை செய்து அனைவருக்கும் வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு குறைத்து வழங்கி உள்ளது.
இது குறித்து துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் கூறுவோம். பார்லிமென்ட்டில் குரல் எழுப்பி கோரிக்கை வைப்போம். தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.
தமிழகத்துக்கு பலமுறை வந்த பிரதமர் மோடி, மாநில அரசின் கோரிக்கை எதையும் கேட்கவில்லை. ஜி.எஸ்.டி.,யில் தமிழகத்துக்கு வர வேண்டிய நிலுவை தொகையையும், வெள்ள நிவாரண தொகையையும் தரவில்லை.
மற்ற மாநிலங்களுக்கு விரைந்து வழங்குவதுபோல, தமிழகத்துக்கு நிதி தருவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.