/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவியர் மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவியர்
மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவியர்
மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவியர்
மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவியர்
ADDED : ஜூன் 17, 2024 11:53 PM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதுார் கிராமத்தை சேர்ந்தவர் பொன்குமார், 42, கார் டிரைவர்.
இவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், பிரஷிதா, பிரதீபா என்ற மகள்களும் உள்ளனர். பொன்குமார் தனக்கு சொந்தமான இடத்தில் 2018ல் சொந்த வீடு கட்டினார்.
அந்த இடம் குடும்ப கூட்டுப் பட்டாவில் இருந்து பிரிக்கப்பட்டது என்பதால், வரைமுறை பட்டா, வீட்டுத் தீர்வை கேட்டு, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார்.
இதுவரை கிடைக்கவில்லை. இதனால், வீட்டிற்கு தேவையான மின் இணைப்பு பெற முடியாமல் பொன்குமார் தவிக்கிறார்.
மின்சார இணைப்பு இல்லாததால், பொன்குமாரின் மகள்கள் மெழுகுவர்த்தி மற்றும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றனர். தெரு விளக்கு வெளிச்சத்திலும் படிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து, பொன்குமார் கூறியதாவது:
மூத்த மகள் கல்லுாரியிலும், இளைய மகள் பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர். மின் இணைப்புக்காக ஆறு ஆண்டுகள் அலைந்து வருகிறேன்.
குழந்தைகளின் படிப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் வீட்டை பார்வையிட்டு மின் இணைப்பு கிடைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.