/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ரூ 38 லட்சம் கன்டெய்னர் மோசடி: கோவையை சேர்ந்தவர் கைது ரூ 38 லட்சம் கன்டெய்னர் மோசடி: கோவையை சேர்ந்தவர் கைது
ரூ 38 லட்சம் கன்டெய்னர் மோசடி: கோவையை சேர்ந்தவர் கைது
ரூ 38 லட்சம் கன்டெய்னர் மோசடி: கோவையை சேர்ந்தவர் கைது
ரூ 38 லட்சம் கன்டெய்னர் மோசடி: கோவையை சேர்ந்தவர் கைது
ADDED : ஜூலை 09, 2024 09:21 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி ஏற்றுமதி நிறுவனத்திற்கு கண்டெய்னர்கள் தருவதாக கூறி ரூ 38 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடியில் மணிகண்டன் என்பவர் ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளராக உள்ளார். இவரது நிறுவனத்திற்கு வெளிநாடுகளுக்கு கப்பலில் பொருட்கள் அனுப்ப கன்டெய்னர்கள் தருவதாக கோவை காந்திபுரத்தை சேர்ந்த ரபீக் சர்தார் 38 உறுதி அளித்தார். அதற்காக 38 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பெற்றார். ஆனால், ரஷ்யாவில் நிதி இழப்பு ஏற்பட்டுவிட்டது எனக் கூறி கன்டெய்னர்கள் வழங்காமல் மோசடி செய்தார். மணிகண்டன் புகாரில், மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் ரபீக் சர்தாரை 38, கைது செய்தனர். அவரது மனைவி பாசுரோஸ்னாரா 35, தம்பி ரகில் 26, மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கு
துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, நல்லதம்பி, மணிகண்டன் ஆகியோருக்கு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி துாத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த மின்வாரிய காண்ட்ராக்டர் வீரபாண்டியன் 59, ரூ 5 லட்சம் வாங்கி இருந்தார்.
வேலை வாங்கித் தரவில்லை. தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் திருப்பி அளித்தார். மீதமுள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தராததால் அவரை போலீசார் கைது செய்தனர்.