/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ பெண் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை பெண் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
பெண் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
பெண் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
பெண் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜூன் 06, 2024 07:18 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகேயுள்ள கரம்பவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ஜெயா, 45. இவர், வீட்டில் வளர்த்து வந்த கோழிகள், 2016ல் திடீரென மாயமாகின. இதனால், வீட்டு வாசலில் நின்று, கோழி திருடியவர்களை ஜெயா திட்டினார்.
அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டி, 73, தன்னை தான் ஜெயா திட்டுவதாக நினைத்து வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த பாண்டி, அரிவாளால் ஜெயாவை வெட்டி கொலை செய்தார்.
திருச்செந்துார் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர். துாத்துக்குடி பி.சி.ஆர்., கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உதய வேலவன் குற்றம்சாட்டப்பட்ட பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இதையுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட பாண்டி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.