/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருச்செந்துார் குன்றுமேலய்யன் கோவில் கும்பாபிஷேகம் திருச்செந்துார் குன்றுமேலய்யன் கோவில் கும்பாபிஷேகம்
திருச்செந்துார் குன்றுமேலய்யன் கோவில் கும்பாபிஷேகம்
திருச்செந்துார் குன்றுமேலய்யன் கோவில் கும்பாபிஷேகம்
திருச்செந்துார் குன்றுமேலய்யன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 12, 2024 09:09 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகேயுள்ள கீழ நாலுமூலைக்கிணுறு பகுதியில் பூரண புஷ்கலா தேவி சமேத குன்றுமேலய்யன் சாஸ்தா மெய்கண்ட மூர்த்தி சாஸ்தா கோவி உள்ளது. சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இக்கோவிலில் அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்களால் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன.
புனரமைக்கப்பட்ட கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. 8 ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கி சிறப்பு பூஜைகள் நடந்தன. குன்று மேலய்யன் சாஸ்தா கோயில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
அதிகாலை 5:00 மணிக்கு மங்கல இசை தேவ பாராயணம், விநாயகர் பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவியம், விசேஷசந்தி, மண்டபராதனை வேதிகார்ச்சனை அக்னி கார்யம், மூலமந்திர ஹோமம் ஆகியவை நடந்தது. காலை 7:30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது.
காலை 8:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு கும்பம் எழுந்தருளல், 8:30 மணிக்கு ஸ்பர்சாஹூதி, பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. காலை 9:15 மணிக்கு மணிக்கு பூஜைகள் செய்யப்பட்ட கும்பங்களை சிவாச்சாரியார்கள் விமான தளத்திற்கு எடுத்து சென்றனர்.
காலை 9:30 மணிக்கு மேல் குன்று மேலய்யன் சாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்களால் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து குன்று மேலய்யன் சாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர், சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை சிவசுப்பிரமணிய பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் கணேசன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.