/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ குரும்பூர் நரசிங்கநாத ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் குரும்பூர் நரசிங்கநாத ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
குரும்பூர் நரசிங்கநாத ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
குரும்பூர் நரசிங்கநாத ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
குரும்பூர் நரசிங்கநாத ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 08, 2024 06:59 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அங்கமங்கலத்தில், 800 ஆண்டுகள் பழமையான, நரசிங்கநாத ஈஸ்வரர் சுவாமி சமேத ஆவுடைநாயகி அம்பாள் கோவில் உள்ளது.
புராண சிறப்பு பெற்ற இக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம், 5ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 150 ஆண்டுகளுக்கு பின், நேற்று நடந்த கும்பாபிேஷகத்திற்கான யாக சாலை பூஜைகள் விமரிசையாக நடந்தன.
காலை, 6:30 மணிக்கு நரசிங்கநாத ஈஸ்வரர் சுவாமி சமேத ஆவுடைநாயகி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம், 103வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அங்கமங்கலம் பஞ்., தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மாலை மஹா அபிஷேகம், சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம், இரவு 10:00 மணிக்கு விநாயகர், சுவாமி - அம்பாள் திருவீதி எழுந்தருளல் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.