/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலைமையாசிரியை மயக்கம் :நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு நேர்ந்த சோகம் பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலைமையாசிரியை மயக்கம் :நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு நேர்ந்த சோகம்
பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலைமையாசிரியை மயக்கம் :நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு நேர்ந்த சோகம்
பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலைமையாசிரியை மயக்கம் :நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு நேர்ந்த சோகம்
பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலைமையாசிரியை மயக்கம் :நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு நேர்ந்த சோகம்
ADDED : ஜூன் 11, 2024 01:39 AM

துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகேயுள்ள சிறுநாடார் குடியிருப்பு கிராமத்தில் ஆர்.எம்.வீ. என்ற அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது.
110 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமையாசிரியையாக பர்வதாதேவி, 49 என்பவர் பணிபுரிந்து வருகிறார். தாளாளராக ராஜன் என்பவர் இருந்து வருகிறார்.
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களை பின் பாதை வழியாக பள்ளிக்குள் அனுமதித்துள்ளனர். தலைமை ஆசிரியை பர்வதாதேவியை வெளியே நிறுத்தி, பள்ளிக்குள் வரவிடாமல் கிரில் கேட்டிற்கு பூட்டு போட்டு சென்றுள்னர்.
சுமார் இரண்டு மணி நேரமாக வெளியே காத்திருந்த பர்வதாதேவி திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் தலையாசிரியை பர்வதாதேவி. அவருக்கும், பள்ளி தாளாளர் ராஜன் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. பள்ளிக்குச் சொந்தமான 12 சென்ட் நிலத்தை ராஜன் விற்பனை செய்ய முயற்சி செய்தாராம்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு பர்வதா தேவி புகார் அளித்துள்ளார். இதனால், அவர் குறித்து வாட்ஸாப்பில் அவதுாறு பரப்பியனாராம். இதனால் பாதுகாப்பு கேட்டு தலைமையாசிரியர் பர்வதாதேவி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் காரணமாக தாளாளர் ராஜன் பள்ளிக்குள் அனுமதிக்காமல் இருந்துள்ளார்.
மேலும், பர்வதாதேவி மீது ஒரு புகார் உள்ளது. அவரை வேறு பள்ளிக்கு இடமாறுதல் வாங்கி செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கூறியது. அவர் செல்ல மறுத்ததால் பிரச்னை தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.