ADDED : ஜூலை 07, 2024 02:25 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி தவசிநகரை சேர்ந்தவர் காசி 52.
விவசாயி. இவர் மாடு வளர்த்து வந்தார். இவரது மாட்டை அருகில் உள்ள பொது இடத்தில் கட்டினார். அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த செல்வமணி 45, எதிர்த்தார். இதில் ஏற்பட்ட தகராறில் காசியை செல்வமணி அரிவாளால் வெட்டினார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் காசி நேற்று இறந்தார்.