/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ரூ.24 கோடி போதைப்பொருள் வீட்டில் பதுக்கிய தம்பதி கைது ரூ.24 கோடி போதைப்பொருள் வீட்டில் பதுக்கிய தம்பதி கைது
ரூ.24 கோடி போதைப்பொருள் வீட்டில் பதுக்கிய தம்பதி கைது
ரூ.24 கோடி போதைப்பொருள் வீட்டில் பதுக்கிய தம்பதி கைது
ரூ.24 கோடி போதைப்பொருள் வீட்டில் பதுக்கிய தம்பதி கைது
ADDED : ஜூன் 22, 2024 01:53 AM

துாத்துக்குடி:துாத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்பிலான ஐஸ் கிரிஸ்டல் பெட்டாமைன் என்ற போதைப்பொருளை வீட்டில் பதுக்கிய கணவன் , மனைவி கைது செய்யப்பட்டனர்.
துாத்துக்குடியில் எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவில் போலீசார் இனிகோ நகரில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கே ஐஸ் கிரிஸ்டல் மெத்தெம் பெட்டாமைன் என்ற போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ எடையுள்ள அதன் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடியாகும்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த நிர்மல்ராஜ் 29, அவரது மனைவி ஷிவானி 28, கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எங்கிருந்து போதைப்பொருள் கிடைத்தது, எங்கு கடத்த திட்டமிட்டனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.