/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ விதிமீறி இயங்கும் டோல்கேட் அகற்ற முற்றுகை போராட்டம் விதிமீறி இயங்கும் டோல்கேட் அகற்ற முற்றுகை போராட்டம்
விதிமீறி இயங்கும் டோல்கேட் அகற்ற முற்றுகை போராட்டம்
விதிமீறி இயங்கும் டோல்கேட் அகற்ற முற்றுகை போராட்டம்
விதிமீறி இயங்கும் டோல்கேட் அகற்ற முற்றுகை போராட்டம்
ADDED : ஜூன் 02, 2024 11:17 PM

துாத்துக்குடி : துாத்துக்குடி -- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், புதுார் பாண்டியாபுரம் பகுதி டோல்கேட்டில், மதுக்கான் என்ற தனியார் நிறுவனம் பணம் வசூலித்து வருகிறது. மாநகராட்சி எல்லையில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டோல்கேட்டில், விதிமுறை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜன்ட் சங்கத்தினர் லாரிகளை டோல்கேட் பகுதியில் நிறுத்தி நேற்று திடீரென டோல்கேட் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கு எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டோல்கேட் இரு பகுதிகளிலும் 1 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், டோல்கேட் மேலாளர் பேச்சு நடத்தினர். பின், அவர்கள் கலைந்து சென்றனர்.
லாரி புக்கிங் ஏஜென்ட் சங்க தலைவர் சுப்புராஜ் கூறியதாவது:
மாநகராட்சி எல்லையை தாண்டி, 15 கி.மீ., துாரத்தில் டோல்கேட் இருக்க வேண்டும். விதிகளை மீறி, 2 கி.மீ., துாரத்தில் இந்த டோல்கேட் உள்ளது. துாத்துக்குடியை சேர்ந்த லாரிகளுக்கு 24 மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், இருமுறை கட்டணம் வசூலிக்கின்றனர்.
பிரச்னைகளுக்கு, ஜூன் 7க்குள் உரிய நடவடிக்கை இல்லை என்றால் லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினரை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.