/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ பா.ஜ.,வுக்கு வருங்காலம் இல்லை: கனிமொழி பா.ஜ.,வுக்கு வருங்காலம் இல்லை: கனிமொழி
பா.ஜ.,வுக்கு வருங்காலம் இல்லை: கனிமொழி
பா.ஜ.,வுக்கு வருங்காலம் இல்லை: கனிமொழி
பா.ஜ.,வுக்கு வருங்காலம் இல்லை: கனிமொழி
ADDED : ஜூன் 05, 2024 03:04 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி 3,92,738 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட 27 வேட்பாளர்களையும் டிபாசிட் இழக்க வைத்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ.,வுக்கு எதிரான மனநிலை மக்களிடம் உருவாகி உள்ளது. அதை, தேர்தலில் மக்கள் தெளிவாக உணர்த்தி உள்ளனர்.
தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு இடமே இல்லை. 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது, தி.மு.க., ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. பா.ஜ.,வுக்கு எதிராக கிடைத்த தெளிவான வெற்றி. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு வருங்காலம் கிடையாது.
தி.மு.க., தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சி மீது நம்பிக்கை இல்லாததால் தான், மக்கள் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்து உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.