/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ துாத்துக்குடியில் பயங்கர தீ விபத்து துாத்துக்குடியில் பயங்கர தீ விபத்து
துாத்துக்குடியில் பயங்கர தீ விபத்து
துாத்துக்குடியில் பயங்கர தீ விபத்து
துாத்துக்குடியில் பயங்கர தீ விபத்து
ADDED : ஜூன் 19, 2024 01:40 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி சந்தை ரோட்டில், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த டட்லி என்பவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு இங்கு தீ விபத்து ஏற்பட்டது. அருகேயுள்ள மாவு மில் உள்ளிட்ட கடைகளுக்கும் தீ பரவியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் மற்றும் டெக்ரேஷன் பொருட்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன.