/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசு மாலை உபயம் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசு மாலை உபயம்
திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசு மாலை உபயம்
திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசு மாலை உபயம்
திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசு மாலை உபயம்
ADDED : ஜூலை 09, 2024 12:10 AM

துாத்துக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி பகுதியை சேர்ந்தவர் போஸ், 67. மதுரை கே.கே.நகரில் வசித்து வரும் இவர், அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இந்நிலையில், நேற்று போஸ், தன் மனைவி மல்லிகா மற்றும் குடும்பத்தினருடன் நேற்று திருச்செந்துார் கோவிலுக்கு வந்தார்.
பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்த அவர், கோவில் மூலவருக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 978 கிராம் எடை உடைய, 90 காசுகள் அடங்கிய தங்க காசு மாலையை இணை கமிஷனர் கார்த்திக்கிடம் உபயமாக வழங்கினார். கோவில் உள்துறை கண்காணிப்பாளர்கள் அற்புத மணி, விஜயலட்சுமி, சுபிதா, பேஸ்கார் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து போஸ் கூறியதாவது: திருச்செந்துார் கோவிலில், மாதந்தோறும் தவறாமல் தரிசனம் செய்வேன். மூன்று மகள்களுக்கு திருமணமானதும் தங்க காசு மாலை நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டியிருந்தேன். 18 ஆண்டு கால வேண்டுதல் இப்போது நிறைவேறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.