/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாப பலி கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாப பலி
கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாப பலி
கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாப பலி
கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாப பலி
ADDED : ஆக 04, 2024 09:28 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பஞ்.,க்குட்பட்ட ஆனந்த்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 56. இவரது வீட்டின், 18 அடி ஆழ உரை கிணறு வெகு நாளாக சுத்தம் செய்யப்படவில்லை. கணேசனும், ஆறுமுகநேரியைச் சேர்ந்த அவரது உறவினர் மாரிமுத்து, 36, என்பவரும் கிணற்று நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வாலி ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. அதை எடுக்க கயிறு கட்டி இறங்கிய கணேசன், விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். அவரை மீட்க முயன்ற மாரிமுத்துவும் மயக்கமடைந்தார். இருவரும் வெளியே வராததால் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து, அவர்களை மீட்க சேசுராஜ், 36, பவித்திரன், 35, ஆகியோர் கிணற்றில் இறங்கினர். விஷ வாயுவால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட இருவரும் மேலே வந்து மயக்கமடைந்தனர். அவர்களை, அப்பகுதியினர் சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்புடன் இறங்கி, இருவரையும் கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். ஆனால், விஷவாயு தாக்கி இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. தாளமுத்துநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.