ADDED : அக் 24, 2025 03:19 AM
திருவாரூர்: திருவாரூரில், பணியின் போது, போக்குவரத்து காவலர் வாக்கி டாக்கி மாயமானது.
திருவாரூர் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரிபவர் இளங்கோ, 46.
இவர், அக்., 19ல், திருவாரூர் வடக்கு வீதியில் இரவு, 11:00 மணிக்கு, பணியில் இருந்த போது, வாக்கி டாக்கியை நிழற்குடையில் வைத்து விட்டு போக்குவரத்தை சரி செய்துள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது, வாக்கி டாக்கி மாயமானது தெரிய வந்தது.
திருவாரூர் டவுன் போலீசில், நேற்று முன்தினம், இளங்கோ புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


