/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/ மூதாட்டி அடித்துக்கொலை அ.தி.மு.க., பிரமுகர் கைது மூதாட்டி அடித்துக்கொலை அ.தி.மு.க., பிரமுகர் கைது
மூதாட்டி அடித்துக்கொலை அ.தி.மு.க., பிரமுகர் கைது
மூதாட்டி அடித்துக்கொலை அ.தி.மு.க., பிரமுகர் கைது
மூதாட்டி அடித்துக்கொலை அ.தி.மு.க., பிரமுகர் கைது
ADDED : ஜூன் 27, 2025 03:22 AM
மன்னார்குடி:மூதாட்டியை கட்டையால் அடித்துக்கொன்ற அ.தி.மு.க., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 85; கணவர் இறந்துவிட்டார். வீட்டில் தனியாக வசித்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மலர்கொடி 70.
இவரது மகன் ஆனந்த்பாபு 37; திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலர். இரு குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாக பேச்சு இல்லை. இந்நிலையில் ஜூன் 24ம் தேதி ஆட்டுக்குட்டியை திட்டுவது போல மலர்கொடியை ஜாடையாக திட்டியுள்ளார் மூதாட்டி.
ஆத்திரமடைந்த ஆனந்த்பாபு மூதாட்டியை கட்டையால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மூதாட்டி, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனந்த்பாபுவை வடுவூர் போலீசார் கைது செய்தனர்.
முத்துலட்சுமி நேற்று முன்தினம் இறந்தார். போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர். மலர்கொடி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.