/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மார்ச் 6ல் ஜிடோ பிரீமியர் கிரிக்கெட்மார்ச் 6ல் ஜிடோ பிரீமியர் கிரிக்கெட்
மார்ச் 6ல் ஜிடோ பிரீமியர் கிரிக்கெட்
மார்ச் 6ல் ஜிடோ பிரீமியர் கிரிக்கெட்
மார்ச் 6ல் ஜிடோ பிரீமியர் கிரிக்கெட்
ADDED : பிப் 25, 2024 02:26 AM
சென்னை:தேசிய அளவில் எட்டு மண்டல அணிகள் பங்கேற்கும், 'ஜிடோ பிரீமியர் கிரிக்கெட் லீக்' போட்டிகள், சென்னையில் மார்ச் 6ம் தேதி துவங்குகின்றன.
ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் நடத்தும் ஜிடோ பிரீமியர் கிரிக்கெட் லீக் - 2024 போட்டி, வரும் மார்ச் 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டிகள், ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹால் மற்றும் மெரினா மைதானத்தில் நடக்கின்றன.
போட்டியில் கிழக்கு மண்டலம், குஜராத் மண்டலம், கே.கே.ஜி., மண்டலம், வடக்கு மண்டலம், மஹாராஷ்டிரா மண்டலம், டி.என்.ஏ.பி.டி.எஸ்., மண்டலம் மற்றும் ராஜஸ்தான் மண்டலம் உள்ளிட்ட தேசிய அளவில் எட்டு அணி கள் பங்கேற்கின்றன.