/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விரைவு ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி விரைவு ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
விரைவு ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
விரைவு ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
விரைவு ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
ADDED : ஜூன் 14, 2025 08:12 PM
ஆவடி:ஆவடி, கவுரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர், ஸ்ரீனிவாசன், 36 ; தனியார் நிறுவன ஊழியர். மனைவி, குழந்தை உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை, தனது அம்மா வீட்டுக்கு செல்ல ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை ஸ்ரீனிவாசன் கடந்த போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், ஸ்ரீனிவாசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.