/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 10 கிலோ கஞ்சா கடத்தல் வாலிபருக்கு ' காப்பு ' 10 கிலோ கஞ்சா கடத்தல் வாலிபருக்கு ' காப்பு '
10 கிலோ கஞ்சா கடத்தல் வாலிபருக்கு ' காப்பு '
10 கிலோ கஞ்சா கடத்தல் வாலிபருக்கு ' காப்பு '
10 கிலோ கஞ்சா கடத்தல் வாலிபருக்கு ' காப்பு '
ADDED : ஜூன் 26, 2025 09:40 PM
மீஞ்சூர்:ஆந்திராவில் இருந்து கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க, ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார், மீஞ்சூர், மணலி, செங்குன்றம், அத்திப்பட்டு, எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோழவரம் டோல்கேட் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த மேல்மாஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 22, என்பது தெரிந்தது.
அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
இதையடுத்து, பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.