Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இளம்பெண் மர்ம மரணம் காதலன் துாக்கிட்டு தற்கொலை

இளம்பெண் மர்ம மரணம் காதலன் துாக்கிட்டு தற்கொலை

இளம்பெண் மர்ம மரணம் காதலன் துாக்கிட்டு தற்கொலை

இளம்பெண் மர்ம மரணம் காதலன் துாக்கிட்டு தற்கொலை

ADDED : செப் 10, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
சோழவரம்:வேப்பேரியில் தங்கும் விடுதியில், இளம்பெண் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த நிலையில், அவருடன் தங்கியிருந்த காதலன், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியச் சேர்ந்தவர் ராபின், 23. இவர், 'ரேபிடோ' பைக் டாக்ஸி ஓட்டுநராக சென்னையில் பணிபுரிந்தார். அப்போது, அண்ணா நகரைச் சேர்ந்த திரிஷா, 20, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

இவர்களின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வேப்பேரி சர்ச் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். பின் ராபின் அறையை வெளிப்பக்கமாக பூட்டி, தங்கும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளார்.

அப்போது, திரிஷாவின் தோழியான ஸ்வேதாவின் 'வாட்ஸாப்' எண்ணிற்கு ராபின் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.

அதில், தங்கும் விடுதியின் முகவரியையும், அங்கு தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் திரிஷா துாக்கிட்டு தற்கொலை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்துள்ளார்.

தகவலறிந்து, திரிஷாவின் உறவினர்கள் சென்று பார்த்தபோது, திரிஷா துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

ராபினின் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் பேசிய அவரது உறவினர்கள், ராபின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். ராபின் உடலை மீட்ட சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us