ADDED : பிப் 11, 2024 11:16 PM
ஆரணி : ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் வசித்தவர் முருகன், 45. விறகு வெட்டும் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.