/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின்சாரம் பாய்ந்து தொழிலாளி படுகாயம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி படுகாயம்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி படுகாயம்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி படுகாயம்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி படுகாயம்
ADDED : மார் 20, 2025 02:16 AM
திருவாலங்காடு,:திருத்தணி- - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இந்த பணியின் போது நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மால், 20, ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.