ADDED : செப் 02, 2025 12:22 AM

ஊத்துக்கோட்டைநடந்து சென்ற கட்டட தொழிலாளி, ஓடையில் தவறி விழுந்து பலியானார்.
வெங்கல் அடுத்த, மாகரல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52. கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் கிராமம் அருகேயுள்ள தண்ணீர் செல்லும் ஓடை வழியாக நடந்து சென்றார். அப்போது தடுமாறி, ஓடை நீரில் விழுந்து பலியானார். தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏழுமலை மனைவி, ஜெயந்தி அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.