/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அங்கன்வாடி பணிக்கு நேர்முக தேர்வு வசதியில்லாததால் பெண்கள் அவதி அங்கன்வாடி பணிக்கு நேர்முக தேர்வு வசதியில்லாததால் பெண்கள் அவதி
அங்கன்வாடி பணிக்கு நேர்முக தேர்வு வசதியில்லாததால் பெண்கள் அவதி
அங்கன்வாடி பணிக்கு நேர்முக தேர்வு வசதியில்லாததால் பெண்கள் அவதி
அங்கன்வாடி பணிக்கு நேர்முக தேர்வு வசதியில்லாததால் பெண்கள் அவதி
ADDED : ஜூன் 14, 2025 02:13 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில், 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடம் காலியாக உள்ளன.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், ஒன்றிய அளவிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை வாயிலாகவும் பெறப்பட்டது. இதில், 800க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றதில், 440 விண்ணப்பங்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டது.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேற்று, திருத்தணி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, ஒன்றிய திட்ட அலுவலர் காஞ்சனா ஆகியோர் நேர்முக தேர்வு நடத்தினர்.
இதில், ஏராளமான பட்டதாரி பெண்கள் பங்கேற்றனர். சில பெண்கள் அவர்களது குழந்தைகள் மற்றும் கணவர், குடும்பத்தினருடன் வந்து நேர்காணலில் பங்கேற்றதால், திருத்தணி தாலுகா அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.
நேர்முக தேர்வுக்கு வந்த பெண்களுக்கு போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை அதிகாரிகள் முறையாக ஏற்பாடு செய்யாததால், அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.