ADDED : செப் 15, 2025 11:40 PM
திருத்தணி;கனகம்மாசத்திரம் அருகே, விவசாய கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
திருவாலங்காடு ஒன்றியம் நெடும்பரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி முனியம்மாள், 35; மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இவர், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தார்.
கனகம்மாசத்திரம் போலீசார், சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.