ADDED : ஜூன் 05, 2025 11:08 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் பகுதியில், 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் உள்ளதாக, நேற்று முன்தினம் மாலை திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
விசாரணையில், கடம்பத்துார் ஒன்றியம் கலியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலம்மா, 56, என்பதும். மணவூரில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு, கடந்த 2ம் தேதி வந்து வீடு திரும்பிய போது, மணவூர் அருகே விவசாய நிலத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிந்தது.
சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரிக்கின்றனர்.