/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி முருகன் கோவிலில் கொலுசு திருடிய பெண் கைது திருத்தணி முருகன் கோவிலில் கொலுசு திருடிய பெண் கைது
திருத்தணி முருகன் கோவிலில் கொலுசு திருடிய பெண் கைது
திருத்தணி முருகன் கோவிலில் கொலுசு திருடிய பெண் கைது
திருத்தணி முருகன் கோவிலில் கொலுசு திருடிய பெண் கைது
ADDED : செப் 23, 2025 10:34 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், மூன்று குழந்தைகளின் வெள்ளி கொலுசுகள் திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த கோபி, சேலம் எடப்பாடியைச் சேர்ந்த விக்னேஷ், பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த கவிதா ஆகியோர், குடும்பத்துடன் மூலவரை தரிசிக்க வரிசையில் காத்திருந்தனர்.
தரிசனத்தை முடித்துவிட்டு தேர்வீதிக்கு வந்த போது, மேற்கண்ட மூவரின் குழந்தைகளின் வெள்ளி கொலுசுகள் திருடு போனது தெரிந்தது. பின், மூன்று பேரும் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார், 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய் ததில், பெண் ஒருவர் கொலுசுகளை திருடியது தெரிந்தது. இது தொடர்பாக, பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 32, என்பவரை போலீசார் கைது செய்தனர்.