/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பரேஸ்புரம் சாலையில் மின்விளக்கு அமையுமா?பரேஸ்புரம் சாலையில் மின்விளக்கு அமையுமா?
பரேஸ்புரம் சாலையில் மின்விளக்கு அமையுமா?
பரேஸ்புரம் சாலையில் மின்விளக்கு அமையுமா?
பரேஸ்புரம் சாலையில் மின்விளக்கு அமையுமா?
ADDED : ஜன 27, 2024 11:17 PM

திருவாலங்காடு திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது பரேஸ்புரம், ராமலிங்காபுரம், வேணுகோபாலபுரம் கிராமங்கள்.
இந்த கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு கல்வி, வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10:00 மணிக்குள்ளாக வீடு திரும்புகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலை, திருவாலங்காடு அடுத்த கூடல்வாடி கிராம பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, 2 - 5 கி.மீ., துாரத்தில் உள்ள தங்களது கிராமத்திற்கு நடந்து சென்று வருகின்றனர்.
அப்படி செல்லும் போது, கூடல்வாடி - பரேஸ்புரம் வரை, 2 கி.மீ., துார சாலையை ஒட்டி மின்கம்பம் இல்லாமல் இரவில் இருட்டாக இருப்பதால், பெண்கள் அந்த சாலை வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.
மேலும் 'குடி'மகன்கள் தொல்லை உள்ளதால், இரவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக செல்ல மின்கம்பம் அமைத்து, மின் விளக்கு பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.