/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆர்.கே.பேட்டையில் மீண்டும் மினி பேருந்து இயக்கப்படுமா? ஆர்.கே.பேட்டையில் மீண்டும் மினி பேருந்து இயக்கப்படுமா?
ஆர்.கே.பேட்டையில் மீண்டும் மினி பேருந்து இயக்கப்படுமா?
ஆர்.கே.பேட்டையில் மீண்டும் மினி பேருந்து இயக்கப்படுமா?
ஆர்.கே.பேட்டையில் மீண்டும் மினி பேருந்து இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 30, 2025 11:13 PM
ஆர்.கே.பேட்டை, மத்துார் மற்றும் பொதட்டூர்பேட்டைக்கு, ஆர்.கே.பேட்டையில் இருந்து இயக்கப்பட்டு வந்த மினி பேருந்து சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என, நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், மத்துார், புச்சிரெட்டிபள்ளி, வங்கனுார், பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களை இணைக்கும் விதமாக, 25 ஆண்டுகளுக்கு முன் ஆர்.கே.பேட்டையில் இருந்து மத்துாருக்கும், பொதட்டூர்பேட்டைக்கும் இரண்டு மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
சரியான சாலை வசதியில்லாத காலகட்டத்திலேயே, இந்த மார்க்கத்தில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
நெசவாளர்கள் தங்களின் நெசவு மூலப்பொருட்களான நுால் கட்டு, பாவு மற்றும் விசைத்தறி உதிரிபாகங்களை கொண்டு செல்ல, இந்த மினி பேருந்து சேவை பெருமளவில் உதவியது.
இந்நிலையில், ஷேர் ஆட்டோக்கள் இயக்கம் அதிகரிக்க துவங்கியதும், இந்த தடத்தில் மினி பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
ஷேர் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் பயணியர் ஏற்றி செல்லப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மீண்டும் இந்த தடத்தில் மினி பேருந்து சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.