/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருமழிசையில் தேங்கும் கழிவுநீரால் அபாயம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது? திருமழிசையில் தேங்கும் கழிவுநீரால் அபாயம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது?
திருமழிசையில் தேங்கும் கழிவுநீரால் அபாயம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது?
திருமழிசையில் தேங்கும் கழிவுநீரால் அபாயம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது?
திருமழிசையில் தேங்கும் கழிவுநீரால் அபாயம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது?
ADDED : ஜூன் 07, 2025 02:53 AM

திருமழிசை:திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை அமைந்துள்ளது. இங்கு, 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவில், ஒத்தாண்டேஸ்வரர்கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருமழிசை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 40 கோடி ரூபாய் செலவில், 2007ல், சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் துவக்கப்பட்டு, 2019ம் ஆண்டு நிறைவடைந்தது.
இந்நிலையில், 12 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்து ஆறு ஆண்டுகளாகியும், தற்போது வரை பாதாள சாக்கடையின் பல பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதனால், பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு சரியான திட்டமிடல் மற்றும் உபகரணங்கள் இல்லாததே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது 65 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட அடைப்பு நீக்கும் வாகனம் வாயிலாக, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அடைப்பு எடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
- பேரூராட்சி செயல் அலுவலர்,
திருமழிசை.