/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஏரிகள் பராமரிப்பு செலவுக்கு நிதி இல்லை புலம்பும் நீர்வள துறை அதிகாரிகள் ஏரிகள் பராமரிப்பு செலவுக்கு நிதி இல்லை புலம்பும் நீர்வள துறை அதிகாரிகள்
ஏரிகள் பராமரிப்பு செலவுக்கு நிதி இல்லை புலம்பும் நீர்வள துறை அதிகாரிகள்
ஏரிகள் பராமரிப்பு செலவுக்கு நிதி இல்லை புலம்பும் நீர்வள துறை அதிகாரிகள்
ஏரிகள் பராமரிப்பு செலவுக்கு நிதி இல்லை புலம்பும் நீர்வள துறை அதிகாரிகள்
ADDED : ஜூலை 04, 2025 02:21 AM
திருத்தணி:ஏரிகளின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு கூட அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என, நீர்வளத்துறை அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி நகராட்சி கே.கே.நகர் பகுதியில் பொதுப் பணித்துறை, கட்டடம் பராமரிப்பு மற்றும் நீர்வள துறை ஆகியவற்றின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இதில், நீர்வள துறை திருத்தணி கோட்டத்தில் உள்ள திருத்தணி, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் உள்ள மொத்தம், 79 ஏரிகளை பராமரித்து வருகிறது. மேலும், கொசஸ்தலை ஆறு மற்றும் நந்தியாற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதாக ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியும் பராமரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஏரிகளை துார்வாரி சீரமைப்பதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
மேலும் மதகு சேதம், நீர்வரத்து கால்வாய் சேதம், அடைப்பு, கரை சேதம் போன்ற சிறு, சிறு வேலைகளுக்கு கூட மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை.
இதனால் பெரும்பாலானஏரிகளில் மதகு சேதம், கரைசேதம், கடைவாசல் சேதம் போன்ற காரணங்களால் ஏரிகளில் மழைநீர் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது.
நீர்வள துறை அதிகாரிகளிடம் ஏரிப்பாசன விவசாயிகள் கேட்கும் போது, ஏரிகள் பராமரிப்பு பணிகளுக்கு கூட அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என மழுப்பலாக பதில் கூறி அனுப்புகின்றனர்.
எனவே வரும் பருவ மழை தண்ணீரை ஏரியில் சேமிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து திருத்தணி நீர்வள துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏரிகள் சீரமைப்பதற்கும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் நிதி தேவை என பட்டியல் தயாரித்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்புகிறோம். ஆனால் நிதி வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் ஏரிகளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நிலை உள்ளது' என்றார்.