/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மழைநீர் கால்வாய்க்கு விமோசனம் துார்வாருகிறது நீர்வளத்துறை மழைநீர் கால்வாய்க்கு விமோசனம் துார்வாருகிறது நீர்வளத்துறை
மழைநீர் கால்வாய்க்கு விமோசனம் துார்வாருகிறது நீர்வளத்துறை
மழைநீர் கால்வாய்க்கு விமோசனம் துார்வாருகிறது நீர்வளத்துறை
மழைநீர் கால்வாய்க்கு விமோசனம் துார்வாருகிறது நீர்வளத்துறை
ADDED : செப் 14, 2025 03:08 AM

பொன்னேரி:வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பராமரிப்பின்றி உள்ள மழைநீர் கால்வாய்களை துார்வாரும் பணிகளில் நீர்வளத்துறை ஈடுபட்டுள்ளது.
பொன்னேரி அடுத்த அயநல்லுார் கிராமத்தில் இருந்து பனப்பாக்கம், பெரிகரும்பூர், குடிநெல்வாயல் வழியாக, பழவேற்காடு உவர்ப்பு ஏரிக்கு செல்லும் கால்வாய் துார்ந்தும், செடிகள் வளர்ந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது.
இதனால், மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகள் வருவாய் இழப்பிற்கு ஆளாகின்றனர். இக்கால்வாயை துார்வாரி, சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
தற்போது, பனப்பாக்கம் கிராமத்தில் இருந்து உப்பு நெல்வாயல் வரை, 4 கி.மீ.,க்கு கால்வாய் துார்வாரும் பணிகளில் நீர்வளத்துறை ஈடுபட்டுள்ளது.
பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், கால்வாயில் உள்ள செடிகளை அகற்றுதல், மேடான பகுதிகளில் உள்ள மண் திட்டுகளை வெட்டி எடுத்து, கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பனப்பாக்கம் கிராமத்தில் மட்டுமின்றி, இக்கால்வாய் பயணிக்கும் அயநல்லுார், சேகண்யம், தேவம்பட்டு, பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 17 கி.மீ.,க்கு மழைநீர் கால்வாய்கள் துார்வாரி சீரமைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன், இப்பணிகளை முடிக்க திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. நீர்வளத் துறை அதிகாரி பொன்னேரி.