/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 50 ஏரிகளில் மீன் ஏலம் நீர்வள துறை முடிவு 50 ஏரிகளில் மீன் ஏலம் நீர்வள துறை முடிவு
50 ஏரிகளில் மீன் ஏலம் நீர்வள துறை முடிவு
50 ஏரிகளில் மீன் ஏலம் நீர்வள துறை முடிவு
50 ஏரிகளில் மீன் ஏலம் நீர்வள துறை முடிவு
ADDED : மார் 25, 2025 07:40 AM
திருத்தணி : திருத்தணி வருவாய் கோட்டத்தில் நீர்வளத் துறையினர் கட்டுப்பாட்டில், மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையால், 22 ஏரிகள் முழு கொள்ளளவும், 38 ஏரிகளில் 70 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் இருப்பு இருந்தது.
ஒரு மாதத்திற்கு மேல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏரிகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள் குறைந்தளவு தண்ணீர் இருப்பு உள்ள ஏரிகளை கணக்கெடுத்துள்ளனர்.
அந்த வகையில், தண்ணீர் குறைவாக உள்ள ஏரிகளில், அப்பகுதி விவசாயிகள் மீன்கள் ஏலம் விடுமாறு கேட்கும் பட்சத்தில், ஏலம் விடுவதற்கு தயார்நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து, திருத்தணி நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது:
திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று ஒன்றியங்களில், அடுத்த மாதம் முதல் விவசாய சங்கத்தினர் மற்றும் அப்பகுதிவாசிகள் அனுமதியுடன், மீன்கள் ஏலம் விடுவதற்கு தயாராக உள்ளோம்.
இதற்காக, ஏரிகளில் உள்ள தண்ணீரின் அளவை வைத்து, மீன் குறித்து கணக்கெடுத்து, ஏலம் மதிப்பீடு தயார் செய்து தருமாறு, திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம்.
இணை இயக்குனர் திட்ட மதிப்பீடு வழங்கிய பின்பு முறையாக 'தண்டோரா' மூலம் விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகளுக்கு தெரியப்படுத்தி ஏலம் விடப்படும். அந்த வகையில் முதற்கட்டமாக, 50 ஏரிகள் ஏலம் விடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.