/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பூதுாரில் வீணாகி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்பூதுாரில் வீணாகி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
பூதுாரில் வீணாகி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
பூதுாரில் வீணாகி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
பூதுாரில் வீணாகி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : ஜன 27, 2024 11:15 PM

சோழவரம், சோழவரம் ஒன்றியம், பூதுார் ஊராட்சியில், 2019ல், 10 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு, தினமும், 2,000 லிட்டர் குடிநீரை சுத்திகரித்து, கிராம மக்களுக்கு வழங்கும் வகையில், அதற்கான உபகரணங்கள், தண்ணீர் தொட்டி ஆகியவை பொருத்தப்பட்டன.
சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. கிராமவாசிகள் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்கும் போது, ஏதாவது ஒரு காரணம் கூறப்படுகிறது.
சுகாதாரமான குடிநீர் தேவைக்காக, அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் அதிகாரிகளின் அலட்சியத்தால் பயனின்றி கிடப்பதுடன், அரசின் நிதியும் வீணாகி வருகிறது.
வீணாகி வரும் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக பயனுக்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.