/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மத்துார் ஏரியில் தண்ணீர் வீண் தடுப்பு அமைக்க காத்திருப்பு மத்துார் ஏரியில் தண்ணீர் வீண் தடுப்பு அமைக்க காத்திருப்பு
மத்துார் ஏரியில் தண்ணீர் வீண் தடுப்பு அமைக்க காத்திருப்பு
மத்துார் ஏரியில் தண்ணீர் வீண் தடுப்பு அமைக்க காத்திருப்பு
மத்துார் ஏரியில் தண்ணீர் வீண் தடுப்பு அமைக்க காத்திருப்பு
ADDED : மார் 23, 2025 08:21 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் ஏரி, 120 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால் மத்துார், மூலமத்துார், கொத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீர்ப்பதுடன், விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
மேலும், ஏரி பாசனத்தை நம்பி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மத்துார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கடைவாசல் வழியாக, சூர்யநகரம் ஏரிக்கு செல்கிறது. இந்நிலையில், நீர்வரத்து கால்வாய் சேதடைந்துள்ளது.
மேலும், மத்துார் ஏரியின் கடைவாசல் சேதம் அடைந்துள்ளதால், தண்ணீர் வீணாக விவசாயிகள் பயிரிடும் வயல்வெளிக்கு சென்று, அங்கிருந்து சூர்ய நகரம் பகுதிக்கு செல்கிறது. சேதமடைந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டாமல், நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால், சூர்யநகரம் விவசாயிகள் பயிரிட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
இதுகுறித்து திருத்தணி நீர்வளத்துறை அதிகாரி கூறுகையில், 'மத்துார் கடைவாசல் பகுதியில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு திட்டமதிப்பீடு தயார் செய்து, நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அரசிடம் கடிதம் அனுப்பியுள்ளோம். நிதி கிடைத்தவுடன் தடுப்புச்சுவர் கட்டப்படும்' என்றார்.