/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வீரராகவர் கோவிலில் வசந்த உத்சவம் விமரிசை வீரராகவர் கோவிலில் வசந்த உத்சவம் விமரிசை
வீரராகவர் கோவிலில் வசந்த உத்சவம் விமரிசை
வீரராகவர் கோவிலில் வசந்த உத்சவம் விமரிசை
வீரராகவர் கோவிலில் வசந்த உத்சவம் விமரிசை
ADDED : ஜூன் 03, 2025 07:50 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம், ஐந்து நாள் வசந்த உத்சவம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான வசந்த உத்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, கேடயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உத்சவர் வீரராகவ பெருமாள் திருக்குளம் வீதி வழியாக, பங்களா தோப்பில் உள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
வேத மந்திரம் முழங்க, திருமஞ்சனம் நடந்தது. பின், இரவு நான்கு வீதி வழியாக உலா வந்து கோவிலுக்குள் மீண்டும் எழுந்தருளினார். வசந்த உத்சவம் வரும் 7ம் தேதி நிறைவடைகிறது.