/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அடிப்படை வசதி இல்லாத வி.ஏ.ஓ., கட்டடம்அடிப்படை வசதி இல்லாத வி.ஏ.ஓ., கட்டடம்
அடிப்படை வசதி இல்லாத வி.ஏ.ஓ., கட்டடம்
அடிப்படை வசதி இல்லாத வி.ஏ.ஓ., கட்டடம்
அடிப்படை வசதி இல்லாத வி.ஏ.ஓ., கட்டடம்
ADDED : ஜன 08, 2024 06:31 AM

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் தினமும் வந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான சான்றுகள் வழங்கி வருகின்றனர்.
ஆனால் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் தற்போது கட்டடம் பழுதடைந்தும், கழிப்பறையும் சேதம் அடைந்துள்ளது.
இதனால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் சிரமப் படுகின்றனர்.
இதுதவிர அங்கு போதிய குடிநீர் வசதியும் ஏற்படுத்தவில்லை. இதனால் சான்றுகள் பெற வரும் பயனாளிகள் அதிருப்தியுடன் செல்கின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் மற்றும் கழிப்பறை சீரமைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.