/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மழைநீர் வடிகால்வாய்களை விரைந்து துார்வார உத்தரவு மழைநீர் வடிகால்வாய்களை விரைந்து துார்வார உத்தரவு
மழைநீர் வடிகால்வாய்களை விரைந்து துார்வார உத்தரவு
மழைநீர் வடிகால்வாய்களை விரைந்து துார்வார உத்தரவு
மழைநீர் வடிகால்வாய்களை விரைந்து துார்வார உத்தரவு
ADDED : ஜூன் 13, 2025 08:06 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் முன்னிலையில் இரண்டு நாட்களாக ஆய்வு செய்தார்.
பின், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு, துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின், கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அலுவலர்களுடன், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
வரும் பருவமழை காலத்தில் 'டெங்கு' போன்ற நோய்கள் பரவும். அவற்றை தடுக்கும் வகையில், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.
வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால் கால்வாய்களையும் வடகிழக்கு பருவமழைக்கு முன் துார்வார வேண்டும்.
பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை கட்டுப்படுத்த, அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.