/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்து அபாயம் வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்து அபாயம்
வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்து அபாயம்
வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்து அபாயம்
வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 29, 2025 01:14 AM

திருமழிசை:திருமழிசையில் இருந்து காவல்சேரி வழியாக, பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
திருமழிசையில் இருந்து காவல்சேரி வழியாக பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில், காவல்சேரி முதல் பாரிவாக்கம் வரை 20க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன.
இந்த வேகத்தடைகள் மீது வர்ணம் பூசப்படாமல் உள்ளது. மேலும், எச்சரிக்கை பலகைகளும் பல இடங்களில் அமைக்கவில்லை.
எனவே, நெடுஞ்சாலையில் வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டுமன, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.