/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ செக்யூரிட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் 'சரண்' செக்யூரிட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் 'சரண்'
செக்யூரிட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் 'சரண்'
செக்யூரிட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் 'சரண்'
செக்யூரிட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் 'சரண்'
ADDED : ஜூன் 05, 2025 11:10 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் அகூர் காலனியைச் சேர்ந்தவர் ரவி, 60. இவர், தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 3ம் தேதி இரவு ரவி வீட்டில் இருந்த போது, ஐந்து பேர் கொண்ட மர்மகும்பல், அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
பின், திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், ரவியின் உறவினர் வேலாயுதம் என்பவருக்கும், அகூர் காலனியைச் சேர்ந்த சூர்யா, 24, என்பவருக்கும் இடையே மாட்டிறைச்சி விற்பனை செய்வதில் தகராறு இருந்து வந்தது.
வேலாயுதத்திற்கு ஆதரவாக ரவி, சூர்யாவிடம் சண்டை போட்டதால், ஆத்திரமடைந்த சூர்யா, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் சென்று, ரவியை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.
நேற்று முன்தினம் விக்கி, அப்பு மற்றும் முன்னா ஆகிய மூவரும், காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வந்தனர்.
நேற்று காலை சூர்யா, தினேஷ் ஆகிய இருவரும், திருத்தணி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.