/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கத்திமுனையில் மூதாட்டியிடம் இரண்டு சவரன் நகை பறிப்பு கத்திமுனையில் மூதாட்டியிடம் இரண்டு சவரன் நகை பறிப்பு
கத்திமுனையில் மூதாட்டியிடம் இரண்டு சவரன் நகை பறிப்பு
கத்திமுனையில் மூதாட்டியிடம் இரண்டு சவரன் நகை பறிப்பு
கத்திமுனையில் மூதாட்டியிடம் இரண்டு சவரன் நகை பறிப்பு
ADDED : ஜூன் 18, 2025 02:31 AM
சோழவரம்:சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா, 76. நேற்று முன்தினம் நள்ளிரவு, இயற்கை உபாதையை கழிக்க வீட்டில் இருந்து வெளியில் வந்து கழிப்பறை சென்றார்.
மீண்டும் வீட்டிற்குள் செல்ல முயன்றபோது, முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு, கத்தியுடன் இருந்த இருவர், யமுனாவை மடக்கினர்.
கத்திமுனையில், அவரிடம் இருந்த மோதிரம், கம்மல் என, 2 சவரன் நகைகளை பறித்துவிட்டு தப்பினர். யமுனா அளித்த புகாரின்படி, சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.