/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்
பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்
பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்
பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்
ADDED : மார் 25, 2025 07:43 AM

பழவேற்காடு : ஆழ்கடல் பகுதியில் உள்ள அரியவகை ஆமைகள், ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். பழவேற்காடு கடற்கரை பகுதியிலும், கடல் ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் வந்து செல்கின்றன.
கடற்கரைகளில் அவை விட்டு செல்லும் முட்டைகளை, வனத்துறையினர் சேகரித்து, பொறிப்பகத்தில் வைத்து அடைகாத்து, குஞ்சு பொறித்த பின் கடலில் விடுகின்றனர். இந்த ஆண்டும், கடல் ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 6,700 கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
அதே சமயம், மூன்று மாதங்களாக முகத்துவாரம் பகுதியில் துவங்கி, காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரையோரங்களில் இறந்த நிலையில் கடல் ஆமைகள் கரை ஒதுங்கி வருகின்றன.
இதுவரை, இப்பகுதிகளில், 35க்கும் அதிகமான கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இது மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்றும் முகத்துவாரப் பகுதியில் கடல் ஆமைகள் சில இறந்த நிலையில் கரை ஒதுங்கின. கடல் ஆமைகள் இறப்பு குறித்து தொடர் ஆய்வுகளையும், அதற்கான தீர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் என, மீனவர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கினறனர்.