/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் அவதி பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் அவதி
பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் அவதி
பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் அவதி
பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் அவதி
ADDED : ஜூலை 03, 2025 09:42 PM
திருத்தணி:திருத்தணி அருகே பழங்குடியினர் வசிக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காததால் அவதிப்படுகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், பொன்பாடி கொல்லாலகுப்பம் பழங்குடியினர் பகுதியில், 50 குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்தாண்டு, தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம், 26 பழங்குடியினருக்கு கான்கிரீட் வீடுகளும், 5 பேருக்கு மாநில அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகளும் கட்டப்பட்டன. ஊராட்சி நிர்வாகம் சார்பில், பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் சிமென்ட் சாலை, குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்து, குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்க வில்லை. இரவு நேரத்தில் மின் விளக்கு வசதியில்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், வீடுகளுக்கு, விரைந்து மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.