/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடியில் 'பீக் ஹவர்சில்' போக்குவரத்து ஸ்தம்பிப்பு கும்மிடியில் திணறும் வாகன ஓட்டிகள் கும்மிடியில் 'பீக் ஹவர்சில்' போக்குவரத்து ஸ்தம்பிப்பு கும்மிடியில் திணறும் வாகன ஓட்டிகள்
கும்மிடியில் 'பீக் ஹவர்சில்' போக்குவரத்து ஸ்தம்பிப்பு கும்மிடியில் திணறும் வாகன ஓட்டிகள்
கும்மிடியில் 'பீக் ஹவர்சில்' போக்குவரத்து ஸ்தம்பிப்பு கும்மிடியில் திணறும் வாகன ஓட்டிகள்
கும்மிடியில் 'பீக் ஹவர்சில்' போக்குவரத்து ஸ்தம்பிப்பு கும்மிடியில் திணறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 03, 2025 02:35 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில், 'பீக் ஹவர்சில்' ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பு உள்ளது. அந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் உள்ளது. அதன் கீழ் சுரங்கப்பாதை, புதுகும்மிடிப்பூண்டி சாலை, தேசிய நெடுஞ்சாலையின் இருபுற இணைப்பு சாலைகள், ரயில்வே சுரங்கப்பாதை சந்திக்கின்றன.
நான்கு திசைகளில் இருந்து வரும் வாகனங்கள், இந்த மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்கின்றன. காலை - மாலை 'பீக் ஹவர்சில்' ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுரங்கப்பாதை வழியாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு சென்று வருகின்றனர்.
நான்கு திசை வாகனங்களும் இந்த குறுகிய சுரங்கப்பாதையை கடக்கும் போது, 'இடியாப்ப சிக்கல்' போன்று வாகனங்கள் சிக்கி கொள்கின்றன. இந்த போக்குவரத்து நெரிசலால், அடுத்தடுத்து உள்ள இணைப்பு சாலைகள், ரயில்வே சுரங்க பாதை, புதுகும்மிடிப்பூண்டி சாலை வரை பாதிக்கிறது.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நான்கு சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து போலீசாரை நியமித்து, வாகன போக்குவரத்தை முறைப்படுத்தினால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி போக்குவரத்து போலீசார், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.