/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விதிமீறி மண் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல் விதிமீறி மண் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்
விதிமீறி மண் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்
விதிமீறி மண் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்
விதிமீறி மண் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்
ADDED : மே 21, 2025 09:17 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே கண்ணம்பாக்கம் கிராமத்தில், விவசாய பயன்பாட்டிற்கு என அனுமதி பெற்று, வீட்டு உபயோகத்திற்கு மண் விற்கப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.
அதன்படி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று, கண்ணம்பாக்கம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ஏரியில், மண் எடுத்து வீட்டு கட்டுமான பயன்பாட்டிற்கு எடுத்து சென்ற இரு டிராக்டர்களை பறிமுதல் செய்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஏரியில் மண் எடுக்க அரசு அனுமதி பெற்ற கண்ணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி, 53, கவுதம், 30, ஆகியோர் மீது, தாசில்தார் அளித்த புகாரின்படி, ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.